ஒழுக்கம் பற்றி என்னுடைய புரிதல்!

 சிறுவயது முதல் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று நம்மை சொல்லி வளர்ப்பார்கள். ஆனால் ஒழுக்கம் என்பது கற்பு சார்ந்த விஷயத்தோடு மட்டுமே பேசப்படுகிறது அதனால் நாம் ஒழுக்கம் பற்றி முழுமையாக எந்த புரிதலும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் ஒழுக்கம் என்பது நமது வாழ்வில் ஒவ்வொரு நொடி பொழுதும் ஒவ்வொரு செயலிலும் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும். உதாரணமாக நாம் காலையில் பல் துலக்குவது முதல் இரவில் தூங்குவது உட்பட அனைத்திலும் ஒழுக்கம் இருக்கிறது. நாம் அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டிய நேரத்தையும் செய்யும் முறையும் அறிந்து செய்ய வேண்டும் அதுவே ஒழுக்கம் ஆகும். பசி எடுத்த பின் உண்ணுதல் அதிலும் சுத்தமான முறையில் கைகளை கழுவுதல் பிறகு உணவு கீழே சிந்தாமலும் தேவையான அளவு மட்டும் எடுத்து சாப்பிடுதல் வீணாக்காமல் தவிர்த்தல் உணவு உண்டவுடன் தண்ணிர் குடிப்பதை தவிர்த்தல். இப்படி சாப்பிடும் விஷயத்திலே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நமக்கு அத்தியாவசியமான செயல்களாக நாம் தெரிந்து வைத்திருப்பவை உண்ணுதல் உறங்குதல். இவை அல்லாமல் நாம் ஆர்வம் ஏற்பட்டு நாமாக செய்யக்கூடிய நமக்காக செய்ய கூடிய விஷயங்களும் இருக்கின்றன. உதாரணம் உடற்பயிற்சி விளையாட்டு ஸ்விம்மிங் நடனம் கவிதை கதை எழுதுதல் இப்படி நிறைய விஷயங்கள் சொல்லலாம் இவைகளை நம் வாழ்வில் நாமாக சேர்த்து கொள்ளும் போது அதற்கென்று நாம் ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டியது வரும் ஆரம்பத்தில் ஆர்வம் உற்சாகம் மற்றும் ஊக்கத்துடன் நாம் நமக்கு பிடித்த அந்த விஷயத்தில் நேரம் செலவிடுவோம். சிறுவயதில் நமக்கு அது ரொம்ப எளிமையாகவும் இருக்கும் நமக்கு உணவளிக்க செலவுக்கு பணம் கொடுக்க நமது உடைகளை துவைப்பதில் இருந்து அனைத்தையும் நமக்கு செய்து தர நமது பெற்றோர்கள் இருப்பார்கள். ஒரு வயதிற்கு பின் நம்மிடம் அந்த ஆர்வம் குறையும். அல்லது நம்மால் அதை செய்ய முடியாத சூழல் ஏற்படலாம். பெரும்பாலும் நாம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்போம்.

You will never always be motivated You must learn to be disciplined!

இப்படிபட்ட சூழ்நிலையில் ஒழுக்கம் பெரிய மாற்றத்தை உங்களுக்கு கொடுக்க வல்லது.நடிகர்களில் சிலர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதை நல்ல முன்னுதாரணமாக கூறலாம்.


அவர்கள் தினசரி குறிப்பிட்ட நேரத்திற்கு நடைப்பயிற்சி உடற்பயிற்சி வழமையாக செய்து வருவதும் நொறுக்கு தீனிகளை தவிர்ப்பது சரியான முறையில் உணவு எடுத்து கொள்வது சரியான நேரத்திற்கு தூங்குவது நேரத்திற்கு எழுவது இது தான் ஒழுக்கம் ஆகும். அதாவது உடலை பேணுவதில் உள்ள ஒழுக்கம். இதை போன்று ஒவ்வொரு விஷயத்திலும் ஒழுக்கம் இருக்கிறது அவரவர் செய்யும் தொழிலுக்கு ஏற்றது போல் அது மாறு படும்.


நாம் என்ன வேலை செய்கிறோம் என்பதை பொறுத்து நாம் எந்த செயல்களை எல்லாம் நம் வாழ்வில் இணைத்து கொண்டு ஒழுக்கமான முறையில் குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுத்து சரியான முறையில் தொடர்ந்து செய்ய போகிறோம் என்பது தான் நம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், நாம் அடைய நினைக்கும் இலக்கை எப்படி அடைய போகிறோம் என்பதற்கான வழி ஆகும். 

Post a Comment

0 Comments