சவூதியில் இருந்து பணம் அனுப்பும் போது எந்த வங்கி சிறந்தது?ஏன்?

சவுதியில் இருந்து பணம் அனுப்பும் போது ஒவ்வொரு வங்கியிலும் பணமாற்ற மதிப்பில் 10 முதல் 50 பைசா வரை வித்தியாசம் வருவதை பார்க்க முடியும். இதனால் என்ன பெரிய தொகை இழப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 

ஒரு சில பைசா வித்தியாசம் என்று பார்க்காமல் ஒவ்வொரு மாதமும் சில நூறு ரூபாய் இதனால் இழக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வருடங்களை கணக்கிடும் போது சில ஆயிரம் ரூபாய் நாம் நம்மை அறியாமல் விட்டு விடுகிறோம்.

உதாரணத்திற்கு ஒரு மாதத்தில் 

10 பைசா வித்தியாசம் எனில் ஆயிரம் ரியால் அனுப்பும் போது,

0.10 x 1000 = 100 Rs

30 பைசா வித்தியாசம் எனில் ஆயிரம் ரியால் அனுப்பும் போது,

0.30 x 1000 = 300 Rs

இதை வருடத்திற்கு கணக்கிடும் போது 10 பைசா வித்தியாசம் எனில் ஆயிரம் ரியால் அனுப்பும் போது,

100 Rs x 12 = 1200 Rs

300 Rs x 12 = 3600 Rs


4 வருடங்கள் 2000 ரியால் மாதம் ஒரு முறை நாட்டிற்கு அனுப்பும் போது மொத்தம் 15,000 ரூபாய் நாம் இழந்திருப்போம்.

மேலும் பணத்தை அனுப்பும் போது ஒரே முறையில் அனுப்புவது தான் சிறந்தது இல்லை என்றால் Transfer fee வேறு 17.50 ரியால் ஒவ்வொரு முறை பணம் அனுப்பும் போது எடுக்கப்படுகிறது. இதில் 350 ரூபாய் வரை ஒவ்வொரு முறை வீணாக இழக்க நேரிடும்.

ஒரே முறை பணம் அனுப்ப வேண்டும் ஆனால் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு நபர்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்றால் ஊரில் ஒரு வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்து நெட் பேங்கிங் வைத்து கொள்ளலாம். இதில் சிக்கல் என்னவென்றால் இந்திய சிம் கார்டு ஒன்று நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும் அப்போது தான் OTP பெற முடியும். சிம் கார்டு பொருத்தவரை ஏர்டெல்,வோடாஃபோன் சிம் தானாகவே ரோமிங் ஆகிவிடும் மற்ற சிம்கார்டுகளுக்கு அந்தந்த சிம் கஸ்டமர் கேர் அல்லது அருகில் இருக்கும் மொபைல் கடைகளில் ஊரில் இருக்கும் போதே விசாரித்து அதற்குறிய ரீசார்ஜ் பேக்குகளை ரீசார்ஜ் செய்து பிறகு சவுதி வரும் போது எடுத்து செல்லலாம்.

சவுதியில் இருந்து பணம் அனுப்புவதற்கு நிறைய வழிகள் இருந்தாலும் நேரத்தை மிச்சம் பண்ண கூடியதும் எளிமையான வழி எதுவென்றால் Android app பயன்படுத்துவதே ஆகும்.

வங்கிகளில் அல்ராஜி,என்ஜாஸ் போன்ற வங்கிகள் நல்ல பணமதிப்பை கொடுக்கின்றன. App களில் Stc pay & Urpay போன்றவை நம்பகமானதாக உள்ளன. Urpay ஆப் அல்ராஜி பேங்க் மூலம் தொடங்கப்பட்டதாகும். Urpay ஆப்  Moneygram மூலம் பணம் நாட்டிற்கு அனுப்பப்படுகிறது இதில் இப்போது வரை Transfer fee எடுப்பதில்லை நல்ல பணமதிப்பையும் கொடுக்கிறது. 

Stc Pay ஆப் Western Union மூலம் பணம் நாட்டிற்கு அனுப்பப்படுகிறது. இதற்கு நேரடியாக western union மூலம் அனுப்புவதே சிறந்தது. ஆனால் StcPay ஆனது Ersal எனும் சவுதி அரசின் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. Ersal மூலமும் நம்மால் பணம் அனுப்ப இயலும்.

Moneygram பொருத்தவரை அதற்கான அக்கவுண்ட் ஓபன் செய்வது சிரமாமன ஒன்றாகும் அதனால் Urpay அல்லது வங்கி சென்று அனுப்ப விரும்பினால் Tahweel அல்ராஜி(அல்ராஜி பேங்க் செல்ல கூடாது Tahweel க்கு தனி ஆபிஸ் உண்டு அங்கு செல்ல வேண்டும்) சிறந்ததாகும்.

இப்போதைய நிலவரப்படி 3000  ரியாலுக்குள் பணம் அனுப்புபவர்கள் Urpay பயன்படுத்துவதே சிறந்தது. அதில் எந்த ஒரு Extra charge இல்லை.

3000 ரியால் மேல் அனுப்பும் போது Extra charge விட கூடுதல் தொகை அதிகம் இருக்கும். அப்போது அதிக மதிப்பு தரும் வங்கி அல்லது தனியார் App பயன்படுத்துவது லாபம் தரும்.

Post a Comment

0 Comments