ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி | Health & Fitness

உன்னை நீயே பாதுகாத்துக்கொள்!

நம்முடைய தளத்தில் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி பற்றிய தகவல்களை பகிர வேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு. இப்போது நானும் ஆரோக்கியத்தை பேண வேண்டிய சூழ்நிலையில் வாழ்கிறேன். அதனால் நிறைய ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வெப்சைட்கள் மூலம் நான் கற்றுக்கொண்ட சில தகவல்களையும் மேலும் உடற்பயிற்சி மூலம் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர நினைக்கின்றேன். இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்வதன் முக்கிய நோக்கம்,

  1. அழகான உடல் தோற்றம்
  2. ஆரோக்கியம் மற்றும்
  3. உடல்வலிமை ஆகும்.(மனவலிமையும் அடங்கும்)

மனவலிமை: மனஉரம் என்பார்கள், தொண்ணுறுகளில் வெளிவந்த உடற்பயிற்சி புத்தகங்களில் பார்த்த ஞாபகம். ஆங்கிலத்தில் Stamina (ஸ்டாமினா) என்பார்கள். அதாவது சகிக்கும் தன்மை.


உனக்கு நீயே உதவிக்கொள்!

உடற்பயிற்சி செய்ய முடிவு செய்த பின் இந்த மூன்று விஷயங்களை அழிக்கும் பழக்கங்கள் நம்மிடம் இருந்தால் அதனை இந்த நிமிடமே விட்டு விட வேண்டும். ஏனென்றால் உடற்பயிற்சி என்பது நாம் உடை அணிவது நம்மை அலங்கரித்து கொள்வது போன்று இல்லை. உங்கள் வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்கும் அளவிற்கு உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே உடற்பயிற்சி அமைகிறது. நம்முடைய இன்றைய வாழ்க்கையில் திறன்பேசியிலும் இணையம் மற்றும் சினிமாவில் தான் அதிக நேரம் செலவாகின்றன. நமக்கென்று ஒரு குறிக்கோள் இல்லாத பட்சத்தில் இணையத்தில் செலவாகும் நேரத்தை தடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இன்று உணவை விட அதிக தேவையுள்ளதாக இந்த திறன்பேசியும் இணையமும் மனித வாழ்க்கை இன்றியமையாத ஒன்றை போன்ற தோற்றத்தை பெற்று விட்டது என்று சொல்வது மிகையாகாது. (உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை).
உடற்பயிற்சி ஏன் வாழ்கை முறையையே மாற்றும்?

  1. உங்களுடைய தூங்கும் நேரத்தை மாற்ற வேண்டி வரும்.
  2. உங்களுடைய அன்றாட வேலை பழுவினிடையே உடற்பயிற்சிக்கென்று குறைந்தது ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டி வரும்.
  3. வலியை தாங்க வேண்டி வரலாம்.
  4. விடாமுயற்சி தேவைப்படும்.
  5. உணவு முறை மாற்றம் தேவைப்பபடலாம்.
  6. ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டி வரும். (ஒழுக்கம் என்றால் என்ன? என்னுடைய கருத்ு.)

அதிலும் நடைப்பயிற்சி என்றால் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் செய்தால் தான் பலனளிக்கும். அதற்காக அரை மணி நேரம் தான் கிடைக்கிறது என்றால் பயன்படுத்தாமல் விட்டு விட வேண்டாம்.
BMI:
முதலில் உடற்பயிற்சி எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள நம் உயரத்திற்கு நாம் எவ்வளவு உடல் எடை கொண்டிருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். இதனை பிஎம்ஐ என்று சொல்வார்கள். இதனை கீழ உள்ள இணையத்தளத்தில் உங்களுடைய உயரம் மற்றும் உடல் எடையையும் நீங்கள் ஆண்/ பெண் என்பதை கொடுத்தால் நீங்கள் எவ்வளவு எடை குறைக்க வேண்டும் அல்லது அதிகரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


Click Here for BMI!

நடைப்பயிற்சி:
நடை பயிற்சியில் இருந்து நாம் ஆரம்பிக்கலாம். எந்த உடற்பயிற்சியும் இதுவரை செய்ததில்லை. நோய் அல்லது தீய பழக்கங்களால் உடல் நலிவுற்ற நிலையில் இருப்பவர்கள் எப்பொழுதும் சோர்வாக உணர்பவர்கள் கடினமான பயிற்சிகளை பயிற்சி செய்ய ஆரம்பிப்பதற்கு முன் குறைந்தது நாற்பது நாட்கள் நடைப்பயிற்சி செய்து வரலாம். முதலில் ஒரு வாரத்திற்கு 30 நிமிடங்கள் நடை பயிற்சி செய்யுங்கள். பிறகு இரண்டாவது வாரம் முதல் தினமும் 5 நிமிடங்கள் அதிகரித்து இரண்டாவது வார முடிவில் நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் நடக்க தொடங்கி இருப்பீர்கள். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் தினமும் ஒரே நேரத்தில் தான் நீங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சிக்கு முன் தண்ணீர் குடித்து விட்டு தான் நடக்க வேண்டும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் காலையில் பயிற்சி செய்வது தான் சிறந்தது. காலை என்றால் ஐந்து முதல் எட்டு மணிக்குள் பயிற்சி செய்வது நல்லது. நடைபயிற்சில் அவரவர் உடல் எடைக்கு ஏற்றார் போல் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. ஒல்லியான தேகம் கொண்ட ஒருவரும் குண்டான ஒருவரும் நடக்கும் போது ஒரே மாதிரி எடை குறைய போவதில்லை. உங்கள் எடை மற்றும் உயரத்தை பொறுத்து நீங்கள் எவ்வளவு நேரம் நடந்தால் எவ்வளவு கலோரிகள் குறையும் மற்றும் எத்தனை நாட்கள் எவ்வளவு நேரம் நடந்தால் உங்களால் எடையை குறைக்க முடியும் என்பதை கீழே உள்ள இணையதளத்தில் பாருங்கள்.
Walking Duration Calculation!

உதாரணமாக 80 கிலோ எடை கொண்ட ஒருவர் வாரத்திற்கு 12 மணி நேரம்(ஒரு நாளைக்கு 2 மணி நேரம் ) என 30 வாரங்கள் (7 மாதங்கள்) நடைப்பயிற்சி செய்தால் தான் 15 கிலோ குறைக்க முடியும்.


நம்மை நாமே பார்த்துக்கொள்வோம்!

...தொடரும்...

Post a Comment

0 Comments