சவூதி அரேபியாவிலுள்ள மதீனா மாநகரைச் சார்ந்த இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஷரீஆ அல்லது தஃவா போன்ற துறைகளில் இளங்கலை / முதுகலை பட்டப்படிப்பு!

சவூதி அரேபியாவிலுள்ள மதீனா மாநகரைச் சார்ந்த  இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஷரீஆ அல்லது தஃவா  போன்ற துறைகளில் இளங்கலை / முதுகலை பட்டப்படிப்புகளை முழுமையான முறையில் கற்பதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது


பார்க்க ; https://iu.edu.sa/announcement/252716.


கற்பிக்கப்படும் பாடப்பிரிவுகள் ; 


كلية الشريعة.

كلية الدعوة وأصول الدين.

كلية القرآن الكريم والدراسات الاسلامية. 

كلية اللغة العربية.

كلية الأنظمة والدراسات الفضائية.


புதிய மாணவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான பல்கலைக்கழகத்தின் முக்கிய  நிபந்தனைகள்.


أن يكون حاصلا على شهادة الثانوية العامة أو ما يعادلها من داخل المملكة أو من خارجها.


மாணவர்  உயர்நிலை பள்ளி படிப்பு /அல்லது அதற்கு இணையான பட்டயப்படிப்பை (Diploma) சவூதிஅரேபியா நாட்டிலோ அல்லது வேறு நாட்டிலோ   முடித்திருக்கவேண்டும்.


ألا يكون قد مضى على حصوله على الثانوية العامة أو ما يعادلها مدة تزيد على خمس سنوات.


மாணவர் உயர்நிலை பள்ளி படிப்பு / அல்லது அதற்கு இணையான பட்டயப்படிப்பு (Diploma) முடித்து ஐந்தாண்டுக்கு மேல் ஆகியிருக்க கூடாது.


أن يكون حسن السيرة والسلوك.


மாணவர் ஒழுக்கமுள்ளவராகவும் நன்னடைத்தையுள்ளவராகவும் இருக்க வேண்டும். (வேறு கெட்ட நடத்தையுள்ளவராக இருக்ககூடாது)


ألا تقل سنه عن (17) سنة، ولا تزيد عن (25) سنة.


மாணவரின் வயது 17 வயதுக்கு கீழ் குறைவாகவும் இருக்ககூடாது. மேலும் 25 வயதை விட கூடுதலாகவும் இருக்ககூடாது.


ألا يكون الطالب قد حصل على منحة دراسية أخرى من إحدى المؤسسات التعليمية في المملكة.


மாணவர் சவூதி அரேபியாவிலுள்ள கல்வி நிறுவனங்களில் எதிலிருந்தும் கல்விக்கான (sholer ship) உதவித்தொகை பெற்றிருக்கூடாது.


أن يكون لائقاً طبياً.


மாணவர்  எவ்வித உடல் நோயோ அல்லது உளவியலாகவோ பாதிக்கப்பட்டவர் இல்லை என மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும்.


ألا يكون مفصولاً من جامعة أخرى لأسباب تأديبية.


மாணவர் ஒழுங்கு நிலை காரணங்களுக்காக எந்த ஒரு பல்கலைக்கழகத்திலும் நீக்கப்பட்டிருக்கூடாது.


أن يتعهد بالالتزام بنظم ولوائح الدولة والجامعة.


சவூதிஅரேபியா நாட்டினுடைய சட்ட விதிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின்  சட்ட விதிகளின் ஒழுங்கு முறைக்கு கீழ்படிவதை மாணவர் உறுதி செய்ய வேண்டும்.


இது போன்ற சில நிபந்தனைகளும் உள்ளன.


மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை

12ம் தேதி நவம்பர் மாதம் 2022 அன்று இறுதிக்குள் பூர்த்தி செய்து விட வேண்டும்.


குறிப்பு ;  விண்ணப்பதாரர் அரபு மொழி தெரியாதவர் என்றாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் ஒரு வருடம் அடிப்படை அரபுமொழி  பாடங்களை கற்று கொண்ட பிறகு தான் குறிப்பிட்ட பாட பகுதியில் அனுமதிக்கப்படுவார்கள். 


விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் சலுகைகள் தொடர்பான விபரங்களைப் பெற கீழுள்ள இணைப்பு செல்ல வேண்டும்.


https://minhatee2.iu.edu.sa/


புதிய மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு கீழ்கண்ட இணைப்பிற்கு செல்ல வேண்டும்.


https://minhatee2.iu.edu.sa/Account/Register.


மேலும் விவரங்களுக்கு ; அரபியில் ; 


https://iu.edu.sa/


ஆங்கிலத்தில்; 


https://enweb.iu.edu.sa/


தொகுப்பு : மெளலவி அப்துஸ்ஸமது அல்தாஃபி.

Post a Comment

0 Comments