ஹுரூபினால் சிக்கி தவிக்கும் விளிம்பு நிலை தொழிலாளர்களுக்கு ஓர் நற்செய்தி!

ஹூரூப் (தலைமறைவு புகார் குறித்த) விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம்


📍இடம்: கிளாசிக் ஆடிட்டோரியம், பத்தா, ரியாத்.

🗓நாள்: 09/12/2022, வெள்ளிக்கிழமை.

⏰நேரம்: மாலை 6:00 முதல் 8:00 மணி வரை.


ஹுரூபினால் சிக்கி தவிக்கும் விளிம்பு நிலை தொழிலாளர்களுக்கு ஓர் நற்செய்தி!


மேண்மை பொருந்திய சவூதி அரேபியா அரசு ஹுரூப் சட்ட சிக்கலில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள் தண்டனை காலத்தை குறைத்து கொண்டு, தாயகம் செல்லும் வகையில், 2 மாத பிணை கால அவகாசம் வழங்கியிருக்கிறது இந்த சலுகையை அனைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கொண்டு சென்று தெளிவுபடுத்த இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..


🅾️ பயணம் செல்வதற்குத் தடை இருக்கிறதா?


🅾️ உங்களுக்கு இங்கு ஹூரூப் இருக்கிறதா?


🅾️ நீங்கள் சிறையில் இருக்கிறீர்களா, அதற்கான உதவி தேவைப்படுகிறதா?


🅾️ ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு வேலை மாற்றம் தொடர்பான பிரச்சினையா?


🅾️ நீங்கள் பணி செய்யும் நிறுவனத்தில் சம்பளம் நிலுவையில் இருக்கிறதா?


🅾️ நிறுவனத்தில் பணி முடித்ததும் சேவையின் வெகுமதி முடிவில் கிடைப்பதில் சிரமமா?


🅾️ இதர அனைத்து சட்டப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்குவதற்கு சவுதி அரேபியா வழக்கறிஞர்கள் மற்றும் முறையான வழிகாட்டியினர் கொண்டு அதற்கான ஆலோசனைகள் மற்றும் தீர்வுகள் வழங்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவரும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவுபவர்களும் வாருங்கள்! 

நல்லதொரு தீர்வை பெற்றுக் கொள்ளுங்கள்!

அறிய வாய்ப்பை, உரிய நேரத்தில் பெற்று பயன் பெறுங்கள்!

அனைவரையும் அழைப்பது

ப்ளீஸ் இந்தியா (PLEACE INDIA) மற்றும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (𝐈𝐖𝐅) ரியாத் மண்டலம் சவூதி அரேபியா




Post a Comment

0 Comments