ஜித்தாவிலிருந்து விமானத்தில் பயணிக்கிறீர்களா?

ஜித்தாவிலிருந்து விமானத்தில் பயணிக்கிறீர்களா? விமான நிலையத்துக்கு 4 மணி நேரத்திற்கு முன் வந்துவிட வேண்டும்!

*****************
ஜித்தா விமான நிலையத்தில் இருந்து பயணிப்பவர்களுக்கு புதிய வழிமுறைகளை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். யாத்ரீகர்கள் திரும்பும் பயணத்திற்கு குறைந்தது 4 மணி நேரத்திற்கு முன்னதாக பயணிகள் விமான நிலையத்தை அடைய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனை ஜித்தா கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த நேரத்தில் பயண நடைமுறைகளை முடித்த பின்னர் விமானம் தனது பயணத்தைத் தொடரும். விமானம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வந்து சேருங்கள். 6 மணி நேரத்திற்கு முன் வரவேண்டாம் என அதிகாரிகள் கொடுத்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் விமான டிக்கெட்டை நீங்கள் வைத்திருப்பதை உறுதிப்படுத்தவும் நினைவூட்டப்படுகிறது.

Post a Comment

0 Comments